இது தான் கவிதையா? - திருகண்ணபுரதான்
நிசப்தமும் மவுனமும்
நிழலுடன் கலந்து
உறைந்து கிடந்தது
தூக்கம் இரவுடன் கலந்து
மோகத்தில் நனைந்து கிடந்தது
நினைவும் கனவும்
உரசிக்கொள்ள
மனசுக் கருவறையில்
கவிதை விதை கர்ப்பம் கொண்டது
விடிந்தால் விருட்சம்
விடியாத வரை மோட்சம்
- திருகண்ணபுரதான்
வெள்ளி, 5 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை நண்பரே ரசித்தேன்.
பதிலளிநீக்கு- கில்லர்ஜி