அந்தரத்தில் ஆடும் நினைவு - திருகண்ணபுரத்தான்
எனக்கான ஒரு கனவு இருந்தது.
அதற்கான இரவும் இருந்தது
கண்கள் தூக்கத்தை யாசித்தது
இளமை பசித்தும்
ஆசை நிறைந்தும் இருந்தது...
இலையுதிர் காலம்
காற்றோடு போகும் சருகு
வேருக்கேது உறவு
-திருகண்ணபுரத்தான்
வெள்ளி, 5 மார்ச், 2010
kavithai
இது தான் கவிதையா? - திருகண்ணபுரதான்
நிசப்தமும் மவுனமும்
நிழலுடன் கலந்து
உறைந்து கிடந்தது
தூக்கம் இரவுடன் கலந்து
மோகத்தில் நனைந்து கிடந்தது
நினைவும் கனவும்
உரசிக்கொள்ள
மனசுக் கருவறையில்
கவிதை விதை கர்ப்பம் கொண்டது
விடிந்தால் விருட்சம்
விடியாத வரை மோட்சம்
- திருகண்ணபுரதான்
நிசப்தமும் மவுனமும்
நிழலுடன் கலந்து
உறைந்து கிடந்தது
தூக்கம் இரவுடன் கலந்து
மோகத்தில் நனைந்து கிடந்தது
நினைவும் கனவும்
உரசிக்கொள்ள
மனசுக் கருவறையில்
கவிதை விதை கர்ப்பம் கொண்டது
விடிந்தால் விருட்சம்
விடியாத வரை மோட்சம்
- திருகண்ணபுரதான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)